தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  இருப்பதாகவும், நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள், தென்மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலையையொட்டியப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.