உள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உள்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மதுரை, திருச்சி, கரூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மன்னார் வளைகுடா பகுதிகளிலும் 40 முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் வரும் 31-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.