வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு: 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு





சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி, இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகரக் கூடும்.  இதன் காரணமாக வடதமிழகப் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் ஒரு சில மாவட்டங்களில் இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

கடலோர ஆந்திர, தெலங்கானா, ஒடிசா பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.