ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்

1697 – சுவீடனில் ஸ்க்ஹோம் நகரின் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்துபோனது.
1840 – மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் பலியாகினர்.
1861 – வங்காள மொழிக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்.
1895 – ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1915 – முதலாம் உலகப் போரில் ஜெர்மனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.
1920 – போலந்துப் படைகள் உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர்.
1920 – சோவியத் ரஷ்யா ஜோர்ஜியாவை அங்கீகரித்தது.
1927 – நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் ராணுவத் தளபதி அல்பிரட் யோட்ல் ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில் கையெழுத்திட்டார்.
1946 – சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் தொடங்கப்பட்டது.
1948 – ஐரோப்பிய அமைப்பு (Council of Europe) உருவாக்கப்பட்டது.
1952 – ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
1954 – வியட்நாமில் “தியன் பியன் பு” (Dien Bien Phu)
போரில் பிரெஞ்சுப் படை தோற்கடிக்கப்பட்டது.
1992 – நாசாவின் என்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை தொடங்கியது.
1999 – கினி-பிசாவு நாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் அரசுத் தலைவர் ஜொவாவோ பெர்னார்டோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2002 – சீனாவின் விமானம் ஒன்று மஞ்சள் கடலில் வீழ்ந்ததில் 112 பேர் பலியாகினர்.
2007 – ரோமப் பேரரசின் ஹெரோட் மன்னனின் கல்லறை ஜெருசலேம் நகருக்கருகே கண்டுபிடிக்கப்பட்டது.
2007 – முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்றை தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் (the Polarstern), கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.
2007 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.