வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942-இல் இந்தியாவில் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கமாகும். மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பை ஏற்று இது தொடர்ந்து நடத்தப்பட்டது. இதுவே ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. பிரித்தானிய அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்கம். இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் 1942 ஆகஸ்ட் 8-ஆம் தேதி கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தீர்மானம் நிறைவேற்றியது. மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி செய் அல்லது செத்து மடி என்று முழங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதற்கு அடுத்த நாள் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் பிரித்தானிய அரசால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதற்கு பின்னர் விடுதலைப் போராட்டம் பொதுமக்களின் போராட்டமாக தீவிரமெடுத்தது.

சிறப்பு நாள்:

மங்கோலியா – தந்தையர் தினம்,

ஈராக்கிய குர்திஸ்தான் போர் நிறுத்த நாள்

பிற நிகழ்வுகள்

1509 – கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசின் மன்னராக சித்தூரில் முடிசூடினார். அவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது.
1768 – ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து தொடங்கினார்.
1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டார்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியின் இராணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜாசன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தார். இந்நாள் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்னசியின் ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.

1876 – தாமஸ் ஆல்வா எடிசன் மிமியோகிரா_ப் என்ற பதிவு இயந்திரத்தைக் கண்டறிந்தார்.

1908 – வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் “லெ மான்ஸ்” என்ற இடத்தில் மேற்கொண்டார்.
1942 – இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் ஜப்பான் மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.
1945 – ஐநா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐநாவில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.
1947 – பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.
1963 – இங்கிலாந்தில் இடம்பெற்ற பெரும் தொடருந்துக் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு 2.6 மில்லியன் ஸ்டெர்லிங் பவுன் பணத்தைக் கொள்ளையடித்தது.
1967 – ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.
1973 – தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய்-ஜுங் கடத்தப்பட்டார்.
1974 – வாட்டர்கேட் ஊழல்: ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.
1988 – மியான்மரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.
1989 – ரகசிய ராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1990 – ஈராக்,  குவைத்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1991 – மிக உயர்ந்த அமைப்பாக விளங்கிய வார்சாவா வானொலித் தொலைத் தொடர்பு கோபுரம் இடிந்து விழுந்தது.
2000 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினரின் எச். எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
2007 – நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டோவர் விண்கலத்தை கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உள்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.