இந்தியா வெற்றி கண்டு வருகிறது: மோடி
புதுதில்லி: பேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கை தருகிறது. இந்தியாவே ஒருசேர இணைந்து இந்த யுத்தத்தில் வெற்றி கண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: கொரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருகிறது. கொரோனா மட்டுமின்றி, வெட்டுக்கிளி தாக்குதல், புயல் போன்ற சவால்களையும் இந்தியா சந்தித்து வருகிறது.
பேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கையை தருகிறது. இதுபோன்ற பல்வேறு சவால்களுக்கு இடையே பணியாற்றுவோர் புதிய வாய்ப்புகளை பெறுவர். நமது ஒற்றுமையும், வலிமையுமே இத்தகைய சவால்களைச் சந்திப்பதற்கான உற்சாக மருந்தாக அமையும். இந்தியாவே ஒன்றுசேர்ந்து இந்த யுத்தத்தில் வெற்றி கண்டு வருகிறது என்றார் மோடி.
You must log in to post a comment.