பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் காலை 9.30 மணி முதல் தங்கள் தேர்ச்சி முடிவுகளை இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 92.3 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 94.80 சதவீதமும், மாணவர்கள் 89.41 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநிலத்தில் 97.12 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.96.99 சதவீதம் பெற்று ஈரோடு 2-ஆம் இடமும், 96.39 சதவீதம் பெற்று கோவை 3-ஆம் இடமும் பெற்றுள்ளன. மாநிலத்தில் 2120 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
You must log in to post a comment.