கடையடைப்பு:வெறிச்சோடிய பெருங்களத்தூர் பஜார்

செங்கல்பட்டு, ஜுலை 5: ஞாயிற்றுக்கிழமை முழு கடையடைப்பு காரணமாக பெருங்களத்தூரில் பஜார் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரானா தொற்றைக் கட்டுப்படுத்தவும் அறவே அழிக்கவும் மத்திய, மாநில அரசுகள் அசுர வேகத்தில் அரசு இயந்திரங்களை முடிக்கி விட்டுள்ளது. இருந்த போதிலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் நோய்த் தொற்று பரவிவருவது அனைவரிடமும் ஒருவித அச்சத்தை உருவாக்கி வருகிறது. இதனால் அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

அந்த வகையிவ் புதுப் பெருங்களத்தூரில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள், வணிக நிறுவனங்கள், காய்கறிக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைக்காக மருந்துக் கடைகள் மட்டுமே திறந்துள்ளன. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதும் காமராஜர் சாலை, கலைஞர் சாலை என போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.