பயணிகள் ரயில் நாளை மறுநாள் முதல் இயக்கப்படும்

ரயில்வே அறிவிப்பு

புதுதில்லி: நாட்டில் முதல்கட்டமாக இரு மார்க்கங்களில் மே 12 முதல் 15 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தியதை அடுத்து பயணிகள் ரயில்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தற்போது சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை (மே 12 )
முதல் பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக 15 ரயில்கள் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும். அதேபோல் அந்த யில்கள் மீண்டும் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறியுள்ளதாவது:
ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்கள் திறந்திருக்காது. ஆன்லைன் டிக்கெட்டுகள் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே யில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
ரயில் பயணத்தை மேற்கொள்வோருக்கு கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் இருக்கக் கூடாது. கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். பயணிகள் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில்
திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் தொடங்குகிறது.
புதுதில்லி ரயில் நிலையத்தில் இருந்து அஸாம், பெங்கால், பிகார், சத்தீஷ்கர், குஜராத், ஜம்மு, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ஒடிஸா, தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் 15 ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.