புதிய டெண்டர் முறையைக் கைவிடக் கோரி போராட்டம்
மதுரை: ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் புதிய டெண்டர் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், பஞ்சாயத்து ராஜ் முறையை அமல்படுத்தக்கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலுகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரை மாவட்டம், கள்ளிகுடி,கொட்டாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். ஊராட்சி தலைவர்கள் சக்திபிரியா கண்ணன், ராஜலட்சுமி செல்வமணி, மாரீசுவரி நவநீதன் ஆகியோர் தலைமையில் 67 ஊராட்சி தலைவர்கள் அளித்த மனு அளித்தனர்.
தமிழக அரசின் புதிய டெண்டர் முறையால் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே புதிய டெண்டர் முறையை அரசு கைவிட வேண்டும். நிதிக்குழு மானியங்களில் மாநில அரசு தலையிடக் கூடாது. பஞ்சாயத்து ராஜ் முறையை அமல்படுத்த வேண்டும். 100 நாட்கள் வேலை பணியாளர்களுக்கு அரசு உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களில் ஊராட்சிகளுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றிருந்தன.
You must log in to post a comment.