பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த நாள்

பி. வி. நரசிம்ம ராவ் இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.

இந்திய சுதந்திர போராட்ட வீரரான நரசிம்ம ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தார்.

1991-இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996- ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது.

பிற நிகழ்வுகள்

1389 – ஒட்டோமான் மற்றும் செர்பியப் படைகள் கொசோவோவில் போரைத் தொடங்கின. இப்போர் ஒட்டோமான் இராணுவத்தினர் தென்கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்ற உதவியது.
1519 – ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் மன்னரானார்.
1651 – 17-ஆம் நூற்றண்டின் மிகப் பெரிய போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் தொடங்கியது.
1763 – ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1776 – ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த “தாமஸ் ஹின்க்கி” தூக்கிலிடப்பட்டார்.
1881 – ஆஸ்திரியாவும் செர்பியாவும் இரகசிய உடன்பாட்டை எட்டின.
1904 – “நோர்ஜ்” என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறு திட்டில் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.
1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பெர்டினண்ட், அவனது மனைவி சோஃபி இருவரும் செர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் தொடங்கப்படுவதற்கு இதுவே காரணியாக அமைந்தது.
1919 – முதலாம் உலகப் போர்: பாரிசில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு முடிவுக்கு வந்தது.

1921 – இந்தியாவின் 9-ஆவது பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் பிறந்த நாள்
1922 – ஐரிய உள்நாட்டுப் போர் தொடங்கியது.
1940 – சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1950 – வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.
1964 – மால்க்கம் எக்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க ஒன்றியத்தைத் தொடங்கினார்.
1967 – கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1994 – ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.
1995 – மண்டைதீவுத் தாக்குதல், 1995: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.
2004 – ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.