ஆன்லைன் கல்வி வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது

புதுதில்லி: ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவலை அடுத்து கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இச்சூழலில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் வகுப்புகளை நடத்தக் கூடாது. 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ஒவ்வொரு பாடமும் 45 நிமிடங்களுக்கு மிகாமல் வகுப்புகளை நடத்த வேண்டும். 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் 4 முறை பாடம் நடத்தலாம்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.