அந்தகாரம் (Official Trailer)

இப்படம் நெட் ஃப்ளக்ஸில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. இது ஓர் அமானுஷ்ய திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தில் வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை வி.விக்னராஜன் இயக்கியுள்ளார்.

வினோத்தின் (அர்ஜுன் தாஸ்) தொலைபேசி பழுதாகிவிடுகிறது. வேறொரு தொலைபேசி வைக்கப்படுகிறது. அந்த தொலைபேசி வந்தது முதல் வினோத் பல பிரச்னைகளை சந்திக்கிறார். அவரது ஆத்மாவை உடலில் இருந்து விடுவிக்கப் போவதாக தொலைபேசியில் யாரோ சொல்கின்றனர்.

பார்வையில்லாத இளைஞர் செல்வத்துக்கு (வினோத் கிஷன்) ஏற்படும் சிறுநீரக கோளாறை அடுத்து அதை மாற்ற பணம் தேவைப்படுகிறது. அதற்காக ஒரு வீட்டில் உள்ள ஆவியை விரட்ட செல்வம் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அது ஆபத்தில் முடிகிறது.

ஒரு நோயாளி மனநல மருத்துவர் இந்திரனின் (குமார் நடராஜன்) குடும்பத்தைக் கொன்று, இந்திரனையும் சுட்டுவிடுகிறார். மீண்டு வரும் இந்திரன் மாறிவிடுகிறார்.

இந்த மூவரின் கதையும் மற்ற இருவருடன் தொடர்புடையதாக உள்ளது. இதுதான் படம்.

Watch video…

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.