அதிதீவிர புயலாக மாறுகிறது நிவர்

சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர்  தொலைவிலும், சென்னைக்கு 420 கிலோ மீட்டர்  தொலைவிலும் நிவர் புயல் உள்ளது. .வடக்கு-வடமேற்கு நோக்கி இப்புயல் நகர்ந்து வருகிறது. அடுத்து இது வடமேற்கு திசையில் நகரத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும்போது கடலோர மாவட்டங்களில், 120 முதல் 145 கி.மீட்டர்  வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேபோல் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயலை அடுத்து நாளை 8 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழக அரசும், புதுவை அரசும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் பேரிடர் மீட்பு குழு, மோட்டார் இயந்திரங்கள், கடலோர காவல் படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.. தமிழக காவல் துறையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்தாகியுள்ளன. அதேபோல் சென்னையில் புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சி.ஏ. உள்ளிட்ட தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசு, தனியார் பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

புயல் மையம் கொண்டுள்ள பகுதி, கரையை கடக்கும் உள்ளிட்டவற்றை அவ்வப்போது அறிந்துகொள்வதர்கு windytv.com என்ற இணையதள முகவரியை கிளிக் அறிந்துகொள்ளலாம்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.