புயல் எந்த இடத்தில் கரையைக் கடக்கப் போகிறது?

சென்னை: வங்கக் கடலில் நகர்ந்து வரும் நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறி கரையை இன்று இரவு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் 300 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு 310 கிலோ மீட்டர்  தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 370 கி.மீட்டர்  தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.. இது மேலும் நகர்ந்து 25-ஆம் தேதி இரவு காரைக்காலுக்கும்-மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புயல் அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும்போது சுமார் 120 முதல் 130 கி.மீ. வேகம் தொடங்கி 145 கி.மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் எனவும் தற்போது கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசும், புதுவை அரசும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

அதேபோல் தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள தகவலில் புயல் புதுச்சேரிக்கும், சென்னைக்கு நெருக்கமாக மகாபலிபுரம்-கல்பாக்கம் அருகே 25-ஆம் தேதி இரவு அல்லது 26-ஆம் தேதி காலை கரையைக் கடக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புயல் மையம் கொண்டுள்ள பகுதி, கரையைக் கடப்பது உள்ளிட்டவற்றை அவ்வப்போது அறிந்துகொள்ள windytv.com என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து பார்வையிடலாம்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.