நைஜீரியா -மக்களாட்சி நாள்

சிறப்பு நாள்

நைஜீரியா – மக்களாட்சி நாள்
ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்

பிற நிகழ்வுகள்

1453 – ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தன.
1660 – இரண்டாம் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக மீண்டும் முடி சூடினார்.
1677 – வெர்ஜீனியாவில் குடியேறியவர்களுக்கும், உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
1727 – இரண்டாம் பீட்டர் ரஷ்யாவின் மன்னராக முடி சூடினார்.
1780 – அமெரிக்கப் புரட்சிப் போரில் சரணடைந்த அமெரிக்கப் போர் வீரர்கள் 113 பேரை “பனஸ்ட்ரே டார்லெட்டன்” தலைமையிலான படைகள் கொன்றன.
1790 – ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13-ஆவது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1848 – விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30-ஆவது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1867 – ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.
1869 – பிரித்தானியாவில் பகிரங்க மரண தண்டனை தடை செய்யப்பட்டது.
1886 – வேதியியலாளர் ஜான் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜெர்னல் இதழில் வெளியிட்டார்.
1903 – சேர்பியாவின் மன்னன் அலெக்சாண்டர் ஒப்ரெனோவிச் மற்றும் அராசி திராகா இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
1914 – புனித லாரன்ஸ் வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற பயணிகள் ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,024 பேர் உயிரிழந்தனர்.
1919 – ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
1947 – இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.
1953 – முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லாரி, ஷேர்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர்.
1972 – டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று ஜப்பானியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1985 – பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் மைதானத்தின் ஒரு பகுதி இடிந்து 39 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் முதற்தடவையாக சோவியத் ஒன்றியத்துக்கு விஜயம் செய்தார்.
1990 – போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
1999 – டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக செய்தது.
1999 – 16 ஆண்டுகள் ராணுவ ஆட்சிக்குப்பின் நைஜீரியாவில் அதிபரை மக்கள் தேர்வு செய்தனர்.
2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.