நிக்கரகுவா தேசிய விடுதலை நாள்

சிறப்பு நாள்

மியான்மர் – பர்மிய மாவீரர் நாள்
நிக்கரகுவா – தேசிய விடுதலை நாள் (1979)

பிற நிகழ்வுகள்

1545 – இங்கிலாந்தின் “மேரி ரோஸ்” என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்” என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் உயிர் தப்பினர்.
1553 – 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிரே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள்.
1870 – பிரான்ஸ் புரூசியா மீது போரைத் தொடங்கியது.
1912 – அரிசோனா மாநிலத்தில் 190 கி.கி. எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.
1947 – பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.
1967 – வட கரோலினாவில் போயிங் 727 மற்றும் செஸ்னா 310 விமானங்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1979 – நிக்கரகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
1980 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மாஸ்கோவில் தொடங்கின.
1985 – இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் கொல்லப்பட்டனர்.
1996 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் தொடங்கின..

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.