நிக்காரகுவா – அன்னையர் நாள்

சிறப்பு நாள்

புரட்சி நாள் (அங்கியுலா)
இந்தியர்களின் வருகை (டிரினிடாட் மற்றும் டொபாகோ)


அன்னையர் நாள் (நிக்காரகுவா) –  மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மிகப்பெரும் ஜனநாயகக்  குடியரசு நாடு. இதன் வடக்கே ஹொண்டூராசும் தெற்கே கொஸ்டா ரிக்காவும் அமைந்துள்ளன. நிக்கராகுவாவின் மேற்கு கரையில் பசிபிக் கடலும்,  கிழக்குக் கரையில் கரீபியன் கடலும் உள்ளன.

பிற நிகழ்வுகள்


1431 – பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஒஃப் ஆர்க் (19) ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.
1539 – தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தார்.
1588 – 30 ஆயிரம் பேருடன் ஸ்பானிய ஆர்மாடா என்ற 130 ஸ்பானியப் போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல் ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து தொடர்ந்தது.
1635 – பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1815 – இலங்கையிலிருந்து காயமடைந்த போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் மூழ்கியது. அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் பலியாகினர்.
1845 – திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்.
1883 – நியூயார்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
1899 – மணிக்கொடி சீனிவாசன், (தமிழ், ஆங்கிலப் பத்திரிகையாளர்) பிறந்த நாள்.
1913 – முதலாம் பால்க்கன் போரின்போது லண்டன் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.
1931 – சுந்தர ராமசாமி, நவீன தமிழ் இலக்கியத்தின் எழுத்தாளர் பிறந்த நாள்
1942 – இரண்டாம் உலகப் போரில் 1000 பிரித்தானிய போர் விமானங்கள் ஜெர்மனியின் கொலோன் நகரில் 90 நிமிஷங்கள் குண்டுமாரி பொழிந்தன.
1966 – முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
1971 – செவ்வாய்க்கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1972 – இஸ்ரேலின் விமான நிலையத்தில் ஜப்பானிய செம்படையினர் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொலையுண்டனர்.
1981 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியின் போது அதிபர் ஜியாவுர் ரகுமான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1987 – கோவா தனி மாநிலமானது.
1998 – வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர்.
2003 – எயார் பிரான்சின் கான்கார்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தைத் தொடர்ந்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.