நெய்வேலி விபத்து:பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்வு
நெய்வேலி, ஜூலை 1:நெய்வேலி 2-ஆவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
அனல் மின்நிலையத்தின் 5-ஆவது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்த 17 பேர் தீவிர சிகிச்சைக்காக சென்னை கொண்டுச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் காணாமல் போன இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

You must log in to post a comment.