நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்ததாகக் கருதப்படும் நாள்

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாகக் கருதப்படும் நாள் (18.8.45) இன்று. இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவரான அவர், இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, இந்தியாவை ஆட்சிபுரிந்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

1945 ஆகஸ்ட் 18-இல் தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்துவிட்டதாகவும், ரஷ்யாவுக்குச் சென்று 1970-களில் இறந்துவிட்டதாகவும், ஒரு துறவியாக வடஇந்தியாவில் வாழ்ந்து 1985-இல் இறந்துவிட்டதாகவும் என பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.

1945 ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் நடக்கவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது, சுபாஷ் சந்திரபோஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்துக்கு வலிமை சேர்ந்தது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு, அதுபற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அந்த விமான விபத்தில் இறக்கவில்லை என தெரிவித்தது.

2-ஆம் உலகப் போரில், ஜெர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு, அச்சு நாடுகள் சார்பில் ஜப்பான் மட்டுமே போரில் இருந்தது. அதன் ஆதிக்கத்தில் இருந்த மஞ்சூரியா மேல் ரஷியா படையெடுத்து, அதை 1945 செப்டம்பர் 20-இல் முழுமையாக கைப்பற்றியது. பாங்காக்கில் அப்போது இருந்த நேதாஜி டோக்கியோ வழியாக மஞ்சூரியாவை அடைந்து அங்கிருந்து ரஷியாவை அடைய ஒப்புக் கொண்டிருந்தார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய கோ சு மிங்) 17 ஆகஸ்ட் 1945-இல் எடுக்கப்பட்டதாகும். 1945 ஆகஸ்ட் 18-இல் தாய்பெயில் வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் இறந்துவிட்டதாக 1945 ஆகஸ்ட் 23-இல் நிப்பானிய செய்தி நிறுவனம் அறிவித்தது. ஆனால் தைவான் நாடு அப்படி ஒரு விபத்து நடக்கவேயில்லை என்று மறுப்பு தெரிவித்தது.

இச்செய்தி இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டதாக கூறப்பட்ட செய்தியை பலர் நம்பவில்லை. அதை மறுத்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல தலைவர்கள் நேதாஜி உயிருடன் இருப்பதாக நம்பினர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1958 ஏப்ரல் மாதத்தில் முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின்போது, நேதாஜி குறித்த உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இருவர் வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோயிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை அளித்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்), இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். அதன்படி 1970-ஆம் ஆண்டு ஜுலை மாதம், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் ஆட்சியின்போது ஓய்வு பெர்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் நடத்திய விசாரணையை அடுத்து வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மைதான் என்று உறுதி செய்யப்பட்ட அறிக்கை தரப்பட்டது. 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , ‘முகர்ஜி ஆணையம்’, என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டன. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், சோவியத் ரஷ்யாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என்றும் கூறியது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.[

இந்நிலையில், உத்திரப் பிரதேசத்தில், 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி பகவான்ஜி, அல்லது ‘கும்னமி பாபா’ என்பது சுபாஷ் சந்திர போஸ்தான் என சிலர் நம்புகின்றனர். நான்கு சம்பவங்கள், அத்துறவி, போஸ்தான் என நம்பக் காரணமாகின. அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடைமையாக்கப்பட்டன. இவை, பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டை ஏற்படுத்தியது. கையெழுத்தியல் நிபுணர் பி.லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துகள் ஒத்துப் போவதாக குறிப்பிட்டிருந்தார்.

பிற நிகழ்வுகள்

1201 – லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது.
1868 – பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.
1877 – செவ்வாய்க்கோளின் ஃபோபோஸ் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1891 – மார்டீனிக் தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் கொல்லப்பட்டனர்.
1917 – கிரீசில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1924 – பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து தனது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது.
1928 – சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
1938 – நியூயார்க்கையும், கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கும் ஆயிரம் தீவுகள் பாலத்தை அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் திறந்துவைத்தார்.
1950 – பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட் படுகொலை செய்யப்பட்டார்.
1958 – விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா (Lolita) என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
1971 – வியட்நாம் போர்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை திரும்ப அழைக்க முடிவு செய்தன.
1983 – டெக்சாசைத் தாக்கிய அலீசியா என்ற சூறாவளியினால் 22 பேர் கொல்லப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.