பண்டித ஜவாஹர்லால் நேரு நினைவு நாள்

சிறப்பு நாள்
பொலீவியா – அன்னையர் நாள்
நைஜீரியா – சிறுவர் நாள்

பிற நிகழ்வுகள்

1703 – ரஷ்ய சார் மன்னர் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார்.
1860 – இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை தொடங்கினார்.
1883 – ரஷ்யாவின் மன்னராக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினார்.
1937 – கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் டன்கேர்க் என்ற இடத்தில் ஜெர்மனியரிடம் சரணடைந்த ஐக்கிய ராச்சியத்தின் நோர்ஃபோக் பிரிவைச் சேர்ந்த 99 பேரில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1941 – ஜெர்மனியின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அட்லாண்டிக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.
1960 – துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின்போது செலால் பயார் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1965 – வியட்நாம் போரில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தெற்கு வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலை நடத்தின.
1967 – ஆஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசுக்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
2006 – ஜாவாவில் நிகழ்ந்த (உள்ளூர் நேரம் காலை 5:53:58, UTC நேரம் மே 26 இரவு 10:53:58) நிலநடுக்கத்தில் 6,000 பேர் உயிரிழந்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.