நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்

சென்னை: நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நீட் தேர்வில் 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

நாட்டில் 3,842 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 238 தேர்வு மையங்களில் 1.18 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.

நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களில் மட்டும் 4 மாணவ, மாணவியர் தற்கொலையுண்டுள்ளனர். நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் தைரியமாக எழுதுவதன் மூலம் வெற்றியை எதிர்கொள்ள முடியும். மனரீதியாக எந்த அழுத்தமும் மாணவ, மாணவியர் கொண்டிருக்கக் கூடாது என கல்வியாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கிளவுஸ், தண்ணீர் பாட்டில், சானிடைசர் ஆகியவற்றை தனித்தனியாக பயன்படுத்த வேண்டும். தேர்வு அறைக்குள் நுழையும்போது அங்கு தரப்படும் முக கவசத்தை மாணவர்கள் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் மாணவர்கள், தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்துக்குள் நுழைவதற்கு முன் கண்டிப்பாக உடல் வெப்பநிலையை பரிசோதித்துக் கொள்ளவும், தேர்வு அறையில் தனிமனித இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.