தேசிய மருத்துவர்கள் தினம்
காட்பாடி, ஜூலை 1: காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதம் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடுகின்றனர். அதன் அடிப்படையில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் தேசிய மருத்துவர் தினம் காட்பாடி அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் த.வ.சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் வரவேற்று பேசினார். பொருளாளர் வி.பழனி, எ.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், மருத்துவர்களின் சேவைகளை பாராட்டி தாராபடவேடு நகர்புற மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்.அகிலா, டாக்டர்.வீ.தீனபந்து ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியது: சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடுகின்றனர். 1991-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான்சந்திரராய் அவர்களின் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
1882 ஜூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. தற்போது கொரனா நோய் தாக்கப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது உயிரினை துச்சமாக மதிப்பு சிறப்பாக சேவையினை இந்த மனித சமூகத்திற்கு செய்து வரும் மருத்துவர்களின் சேவையினை மனதார பாராட்டுகின்றோம் என்றார்.
தாராபடவேடு அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் ஜி.அம்மு, எம்.ஷர்மிளாதேவி, எஸ்.அம்பிகா, டேபோரா தேவமகிமைசெல்வி, கே.பிரியங்கா, ஜி.ஏசம்மா, தன்னார்வ தொண்டர்கள் கே.சி.வி.கதிரேசன், செ.ஜ.சோமசுந்தரம், ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். நகர்புற மருத்துவ அலுவலர் ஆர்.அகிலா நன்றி கூறினார்.
You must log in to post a comment.