நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 30: சாத்தன்குளத்தில் வியாபாரிகள் இருவர்  உயிரிழப்பை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாத்தன்குளம் செல்போன் கடை வியாபாரி ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் மருத்துவமனையில் இறந்ததாக பதிவான வழக்கு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐக்கு மாற்றப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி மதுரையில் செவ்வாய்க்கிழமை காலை நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் செ. வெற்றிக்குமரன், மண்டல ஒருங்கிணைப்பாளர் செங்கணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.