மதத்தை வென்றது மனிதநேயம்

குடியாத்தம் : இந்து மத சகோதரரின் உடலை அவரின் மத சம்பிரதாயப்படி தமுமுகவை சேர்ந்த முஸ்லிம்கள் அடக்கம் செய்துள்ளனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரின் இந்த செயல் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

குடியாத்தம் நடுப்பேட்டை பெரியவானி தெருவை சேர்ந்த பெரியவர் ஒருவர், செவ்வாய்க்கிழமை கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவரின் குடும்பத்தினர் தமுமுகவினரிடம் உதவி கோரினர்.

இதையடுத்து,  அவரது உடலை தமுமுகவினர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று இந்து மத சம்பிரதாயப்படி நல்லடக்கம் செய்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.