காய்கறி விற்ற சிறுமிக்கு உதவி
மதுரை : திருப்பரங்குன்றம் அருகே காய்கறி விற்றுவந்த சிறுமிக்கு அரிமா சங்கம் சார்பாக நிவாரண உதவி வழங்கப்பட்டது.
மேலும் சிறுமி முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பி விக்னேஷ் ஆகியோரை தத்தெடுத்து கல்லூரி வரை பயில்வதற்கான கல்வி செலவையும் அரிமா சங்கம் ஏற்றுக்கொண்டது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரத்தில் ஆறாவது படிக்கும் சிறுமி முருகேஸ்வரி காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் செய்தி ஊடகங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகள். சிறுமி முருகேஸ்வரிக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை நண்பர்கள் அரிமா சங்கம் சார்பாக இந்த வருடத்தின் முதல் திட்ட உதவியாக ரூ. 5 ஆயிரம் வழங்கினர்.
பிரண்ட்ஸ் லயன்ஸ் கிளப் தலைவர் முர்த்தி, செயலர் கங்காதரன்.பொருளாளர் தனபாலன், வட்டார தலைவர் பூபாலன் ஆகியோர் ரூ. 5 ஆயிரம் வழங்கினர். மேலும் சிறுமி முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பியின் கல்லூரி படிப்பு வரை கல்வி செலவை ஏற்பதாகவும் தெரிவித்தனர்.
You must log in to post a comment.