பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதம்


புதுதில்லி: பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாஜக அரசின் ஓராண்டு சாதனைகள், அரசு எதிர்கொள்ளும் சவால்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2-ஆவது முறையாக பதவியேற்று சனிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
பாஜக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட ஒருசில முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-ஐ ரத்து செய்தது, காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது, உச்சநீதிமன்றம் மூலம் ராமர் கோயில் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம்.


இதுபோன்ற ஒரு மோசமான நோய் பாதிப்பு காலகட்டத்தில் எவர் ஒருவரும் துன்பம் அடையவில்லை என்று கூறிவிட முடியாது. நமது தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு குறு தொழில் நடத்துவோர், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரம் இதுபோன்ற சிக்கல்கள், துன்பங்கள் போன்றவை பேரிடராக மாறிவிடாமல் தடுப்பதற்கான போதிய கவனத்தை அரசு செலுத்தி வருகிறது.
நமது நாடு நிறைய சவால்கள் மற்றும் சிரமங்களை சந்தித்து வருகிறது. இதற்காகத்தான் நான் இரவு பகலாக உழைத்து வருகிறேன். என்னிடம் வேண்டுமானால் குறைபாடுகள் இருக்கக்கூடும். ஆனால் நமது நாட்டில், இல்லை என்று எதுவுமே இல்லை. நான் உங்களை நம்புகிறேன். உங்கள் பலம், உங்கள் சக்தி ஆகியவற்றை நான் ரொம்பவும் நம்புகிறேன். என்னை விடவும் உங்களை அதிகம் நம்புகிறேன் என மோடி கூறியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.