நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்:பிரதமர் மோடி


புதுதில்லி:நாட்டில் ஊரடங்கு படிப்படியாக விலக்கப்பட்டு வரும் சூழலில் நாம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
மான் கி பாத் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது குறிப்பிட்டதாவது:
கொரோனாவுக்கு எதிரான போரை நாட்டு மக்கள் மிகுந்த வலிமையுடன் நடத்தி வருகின்றனர். பொதுமுடக்கம் படிப்படியாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மக்களின் ஒத்துழைப்புதான் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முக்கியக் காரணம். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதை உலகமே உற்று நோக்கி வருகிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது.
சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண யோகாவை பயன்படுத்த மக்கள் முயன்று வருகின்றனர். பிராணயாமம் போன்ற சில பயிற்சிகள் நமக்கு மிகச்சிறந்த தீர்வை அளிக்கும்.
நாடு கொரோனாவை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் பொருளாதார விஷயத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெட்டுக்கிளி பிரச்னை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் மோடி.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.