மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

புதுதில்லி: பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள்மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

பிகார் சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ளன. இச்சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.

பிகார் தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பாஜக வெற்றி பெற்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன, தோல்வியை தழுவும் நிலையில் அச்சூழலை எப்படி எதிர்கொள்வது போன்ற ஆலோசனைகளையும் அவர்கள் செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது அமைச்சரவையில் 10 மக்களவை உறுப்பினர்கள் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு கேபினட் அந்தஸ்து மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவி வழங்குவதற்கு பிரதமர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிவசேனா, அகாலிதளம் விலகலை ஈடுசெய்யும் வகையில் ஒருசில கட்சிகளை கூட்டணியில் இணைக்க பிரதமர் விரும்புகிறார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவிருப்பதாக பேசப்படுகிறது. அத்துடன் மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்குவது தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுத்திருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் பேசவிருப்பதாகவும் தெரிகிறது.

எது எப்படியோ இம்மாத இறுதிக்குள் மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவது மட்டும் உறுதியாகியுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.