மாணவர்கள் முன்னேறினால் ஆசிரியருக்கு பெருமை:அமைச்சர் பேச்சு

மதுரை: தனது மாணவர்கள், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் ஆட்சியராக, காவல் துறை அதிகாரியாக முன்னேறினால் பெருமைபடுபவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

மதுரை, காசாகுளம் சிஇஒஏ பள்ளி வளாகத்தில் பாரதி யுவகேந்திரா மற்றும் சிஇஒஏ மேல்நிலைப்பள்ளி சார்பில் சிஇஒஏ பள்ளி நிறுவனத் தலைவர் ராஜா கிளைமாக்சு தலைமையில் நடைபெறற விழாவுக்கு பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்.

தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதில் பங்கேற்று 12-ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவ – மாணவியருக்கு தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

அரசு பள்ளியில் படித்து 500 மதிப்பெண் பெற்ற திருப்பரங்குன்றம் அரசு பள்ளி மாணவி, குடு குடுப்பைகாரரின் மகள் தேவயானி, மற்றும் தனியார் பள்ளியில்
594 மதிப்பெண் பெற்ற நிகிலேஸ்வரி, 586 மதிப்பெண் பெற்ற தர்னீஷ்,
578 மதிப்பெண் பெற்ற ஹரிபிரியா ஆகியோரை பாராட்டி, கேடயங்கள் மற்றும் ரொக்கப்பரிசுகளை அமைச்சர் வழங்கினார்.
மேலும், நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு வழங்க 1000 பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை கல்வி துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியது:


நான் ஆசிரியர்களை மிகவும் வணங்குபவன், அவர்கள் மீது அதிக மரியாதை வைத்திருப்பவன். ஏனென்றால் ஒரு மனிதனின் அருகில் இருக்கும் அவனது நண்பன் ஒரு படி முன்னேறினால் கூட மனிதனுக்கு பொறாமை வரும்.
ஆனால், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் ஆட்சியராக, காவல் துறை அதிகாரியாக முன்னேறினால் பொறாமைபடாமல் பெருமைபடுபவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே என்றார்.

சிஇஒஏ பள்ளி ச்செயலாளர் சாமி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், காவல் துறை உதவி ஆணையாளர் லில்லி கிரேஸ், பள்ளி முதல்வர் ஹேமா ஆட்ரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.