மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசு கடும் எதிர்ப்பு

சென்னை: கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லைக்கு மிக அருகேயுள்ள மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் முழுமையாக நின்றுவிடும் அபாயம் உள்ளதால் தனது கடும் எதிர்ப்பை தமிழகம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் காணொலி மூலம் நடத்தப்பட்ட கூட்டத்தில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து ஆணையம் மேகேதாட்டு அணை குறித்து பரிசீலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் பங்கேற்றார்

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.