2,834 மருத்துவப் பணியாளர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் 2,834 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்கெனவே 530 மருத்துவர்கள், 4893 செவிலியர்கள், 1508 லேப்-டெக்னீஷியன்கள், 2715 சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்த 574 அரசுப் பணியில் இல்லாத முதுநிலை மருத்துவ மாணவர்களை மாத ஊதியம் ரூ.75 ஆயிரம் என்ற அளவில் கூடுதலாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய நியமிக்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாத ஊதியம் ரூ.60 ஆயிரம் வீதம் 665 மருத்துவர்களையும், மாத ஊதியம் ரூ.15 வீதம் 365 லேப்-டெக்னீஷியன்களையும்,  மாத ஊதியம் ரூ.12 ஆயிரம் வீதம் 1230 பல்நோக்கு சுகாதார பணியாளர்களையும் பணி நியமனம் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் மூன்று மாத ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.