தனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்
மதுரை: மதுரை நகரில் பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் அதிகம் வசூலிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையானது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் சில தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், அரசு விதித்துள்ள கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, அங்கு சிகிச்சை பெற்று திரும்பிய பலர் புகார் தெரிவிக்கின்றனர். சில தனியார் மருத்துவமனைகளில் பெற்ற தொகைக்கு ரசீதும் வழங்கப்படுவதில்லையாம். இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
You must log in to post a comment.