பசியில் மயங்கி விழுந்தவரை மீட்ட போலீஸார்

மதுரை: மதுரை, மேலூர் சோதனைச் சாவடி அருகே பசியில் மயங்கி விழுந்த நடமாநில தொழிலாளியை போலீஸார் மீட்டு அவருக்கு உணவளித்தனர்.

மேலூர் சோதனைச் சாவடி பகுதியிலுள்ள நான்கு வழிச்சாலை பாலத்தில் நடந்து வந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி இங்குமிஷ்ரா (20) மயங்கி விழுந்தார். இவர் திருமங்கலத்திலிருந்து தனது சொந்த ஊருக்கு நடைபயணமாக புறப்பட்டுச் சென்றபோது பசியில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் செந்தில் மற்றும் உடன் இருந்த காவலர்கள் மயங்கி விழுந்த அந்த நபரை மீட்டு உணவு வாங்கிக் கொடுத்து உதவினர்.  மயங்கி விழுந்தவரை விரைந்து மீட்டு உணவளித்து காப்பாற்றிய போலீஸாரை பலரும் பாராட்டினர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.