மாநில நிதிக்குழு மானியம் வழங்க கோரிக்கை

வாடிப்பட்டி, ஜுலை, 5:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிமன்றத் தலைவர்கள்
கூட்டமைப்புக் கூட்டம் ஆண்டிபட்டி இந்திராநகர் சேவைமையக் கட்டடத்தில்
நடந்தது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்புத் தலைவர் சகுபர்சாதிக் தலைமை
தாங்கினார். ஊராட்சிமன்றத் தலைவர்கள் பாண்டுரெங்கன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பவுன்முருகன் வரவேற்றார்.

இரும்பாடி ஈஸ்வரிபண்ணைசெல்வம், முள்ளிப்பள்ளம் பழனிவேல், ரிஷபம் சிறுமணி, குட்லாடம்பட்டி கதிரவன், காடுபட்டி ஆனந்தன், நாச்சிகுளம் சுகுமாறன், குருவித்துறை நம்பிராஜன், கருப்பட்டி அம்பிகா, திருவேடகம் பழனியம்மாள், நெடுங்குளம் சுப்பிரமணியன், ராமயன்பட்டி குருமூர்த்தி, ஆண்டிபட்டி மீனாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்றங்களுக்கு 3 மாதம் நிலுவையில் உள்ள மாநிலநிதிக்குழு மானியத்தை உடனே வழங்க கோரியும், ஊராட்சி கணக்கு எண் மாற்றங்களுக்கு கணினி காலதாமதத்தை தவிர்க்க எழுத்துமூலம் மாற்ற கோரியும், வறுமைக்கோடு  பயனாளி பட்டியல் மற்றும்
பிரதமர் வீடு திட்ட பயனாளிகளை தேர்வு செய்ய பஞ்சாயத்து தலைவர்களுக்கு
அனுமதி வழங்க கோரியும், தேசிய ஊரக வேலை திட்டத்திற்கும்,
ஊராட்சிமன்றத் தலைவருக்கு அடையாள அட்டைகளை வழங்க கோரியும், டெண்டர் மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கும் அதிகாரத்தை ஊராட்சிமன்றத் தலைவருக்கு வழங்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர்
கே.எம்.பாண்டுரெங்கன் நன்றி கூறினார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.