மலேஷியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து தனி நாடான நாள்

தென்கிழக்கு ஆசியாவில்,மலேஷியத் தீபகற்பத்தின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு சிங்கப்பூர். ஜொகூர் நீர்ச்சந்தி இதை மலேஷியாவிடம் இருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேஷியாவின் ரியாவு தீவுகளைப் பிரி்க்கிறது.

1819-ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியோடு பிரிட்டன் கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 1824-இல் பிரிட்டனின் நேரடி ஆட்சியில் சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டது.1826-இல் தென்கிழக்காசியாவின் ஒரு பிரிட்டன் குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது. 2-ஆம் உலகப் போரின்போது ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மீண்டும் 1945-இல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது.1963-இல் பிற பிரிட்டன் குடியேற்றப் பகுதிகளோடு சேர்ந்து மலேஷியாவுடன் இணைக்கப்பட்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. அதைத் தொடர்ந்து 1965 ஆகஸ்ட் 9-ஆம் தேதி மலேஷியாவிடம் இருந்து பிரிந்து தனிக்குடியரசு நாடாக மாறியது.

சிறப்பு நாள்

தென்னாப்பிரிக்கா – தேசிய பெண்கள் நாள்

பிற நிகழ்வுகள்

கிமு 48 – ஜூலியஸ் சீசர் பம்பீயை போரில் தோற்கடித்த நிலையி்ல், பம்பீ எகிப்துக்கு தப்பி ஓடி தலைமறைவானார்.
378 – ரோமப் பேரரசர் வேலென்ஸ் தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னரும் அவரது படையினர் பாதிப்பேரும் கொல்லப்பட்டனர்.
1048 – 23 நாள்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசஸ் இறந்தார்.
1173 – பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் தொடங்கின. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.
1655 – ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.
1842 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ராக்கி மலைகளின் கிழக்குப் பகுதியில் எல்லைகளுக்கான உடன்பாடு எட்டப்பட்டது.
1892 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
1902 – ஏழாம் எட்வர்ட் ஐக்கிய ராச்சியத்தின் மன்னராக முடிசூடினார்.
1907 – இங்கிலாந்தில் பிரௌன்சி தீவில் ஆகஸ்ட் 1 இல் தொடங்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.
1942 – வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியமைக்காக மகாத்மா காந்தி உட்படப் பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாகியின் மீது ஐக்கிய அமெரிக்கா வீசிய கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000 முதல் 90,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.
1965 – சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.
1965 – ஆர்கன்சசில் டைட்டான் ஏவுகணைத் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 53 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1974 – வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.
 

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.