மதுரையில் தீவிரப்படுத்தப்படும் வாகனத் தணிக்கை

மதுரை: மதுரையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதன்கிழமை நகரில் பல இடங்களில் போலீஸார், வாகனங்களில் பயணித்தோருக்கு அறிவுரைகள் வழங்கி அனுப்பினர்.
மதுரை நகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆலோசனையின் பேரில், போலீஸார் கோரிப்பாளையம் தேவர்சிலை, சிம்மக்கல், அண்ணாநிலையம், கே.கே.நகர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி காரணமின்றி, வெளியே சுற்றித் திரிந்தால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

பொதுமக்கள் போலீஸாரின் அறிவுரைகளை பொருட்படுத்தாத சூழலில், வாகனங்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த சில நாட்களாக மதுரை நகரில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து சமூக இடைவெளி பாதுகாப்பு குறைந்து வருவதால் போலீஸார் கெடுபிடியை காட்டத் தொடங்கியுள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.