வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்: மதுரை எஸ்.பி.

மதுரை: மதுரை மாவட்ட மக்களுக்கு எனது வாட்ஸ் அப் எண் கொடுக்கப்படும் . பொது மக்கள் அதில் புகார் தெரிவித்தால் நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று மதுரை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜித்குமார் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியது:

பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சிறப்பாக செயல்படும். கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் இது தான் முதல் கடமை.

மதுரை மாவட்ட மக்களுக்கு எனது வாட்ஸ் அப் எண் கொடுக்கப்படும், பொது மக்கள் என்னுடைய 94981 12113 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால், நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பொது மக்கள் தகவல் கொடுக்கலாம்.

மதுரையில் மைனர் திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவைகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.