நீதிமன்றத்தில் காவல் அதிகாரிகள் ஆஜர்

மதுரை, ஜூன் 30: சாத்தான்குளத்தில் வியாபாரிகள் இறந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆஜராகினர்.
சாத்தன்குளத்தில் ஊரடங்கின்போது சட்டத்தை மீறியதாக வியாபாரிகள் ஜெயராஜ், பெனிக்ஸ் (தந்தை, மகன்)  போலீஸாரால் கைது செய்யப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் உயர்நீதிமன்றம் காவல் துறை ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மற்றும் காவல் அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து அவர்கள் அனைவரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.