எம்.எல்.வசந்தகுமாரி பிறந்த நாள்
எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோர் மும்மணிகள் என அழைக்கப்பட்டவர்கள். வசந்தகுமாரி தன்னுடைய குரல் வசீகரத்தாலும், ஸ்ருதி சுத்தமாக, லயசுத்தமாக பாடும் திறமயால் தனக்கென தனி பாணியை வகுத்து சங்கீத உலகில் வலம் வந்தவர்.
பழைமைக்கும், புதுமைக்கும் ஏற்ப தன் இசை ஞானத்தை ரசிகர்களுக்கு அலட்டிக் கொள்ளாமல் வழங்கியவர். பாரம்பரிய இசையை புதிய பாணியில் வழங்குவதில் இவருக்கு இவர்தான் நிகர் என்று சொல்வதுண்டு. மிருதங்க மாமேதை பாலக்காடு மணி அய்யர் இவருக்கு பக்கவாத்தியம் வாசித்து சிறப்பு செய்துள்ளார்.
இவர் சபாக்களின் முன்னேற்றம், நிறுவனங்களின் தொடக்கம், ராணுவ வீரர்களின் நலநிதி ஆகியவற்றுக்கு எவ்வித எதிர்பாப்புகளும் இன்றி செய்து உதவிய பெருமை இவருக்கு உண்டு. 1964-இல் சீன ஆக்கிரமிப்பின்போது, தான் அணிந்த நகைகள் முழுவதையும் நாட்டு நலனுக்காக வழங்கி தனது நாட்டுப் பற்றை உணர்த்தியவர். ஏழை மாணவர்களின் கல்வி, ஏழைகளின் திருமணங்கள் போன்றவற்றிற்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்தவர்.
சங்கீத ரத்னாகரம், சங்கீதவாணி, திருப்பாவை மணி, இசைச் செல்வம், சங்கீத கலாசிகாமணி, மதுரகலா பிரவீணா போன்ற பட்டங்கள் பெற்றவர். 1967-ல் பத்மபூஷண், 1970-இல் சங்கீத நாடக அகாடமி விருது, 1976-இல் மைசூர் பல்கலையில் டாக்டர் பட்டம், 1978-இல் சங்கீத கலாநிதி விருதுகளைப் பெற்றவர்.
திரை இசையில் 150-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். பரதநாட்டியத்திற்காக இவர் பாடிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.“சின்னஞ்சிறுகிளியே” என்ற பாரதியார் பாடலை ராஜா தேசிங்கு படத்தில் பாடியுள்ளார்.
பிற நிகழ்வுகள்
324 – எட்ரியனோப்பில் நகரில் இடம்பெற்ற போரில் ரோமப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டீன் லிசீனியசை வென்றார்.
987 – ஹியூ காப்பெட் என்பவர் பிரான்ஸ் மன்னர் ஆனார். அவரது வம்சத்தினர் 1792-இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர்.
1250 – பிரான்ஸின் -9-ஆம் லூயி எகிப்தில் ஏழாவது சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்தபோது பாய்பர்களால் பிடிபட்டார்.
1608 – கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.
1754 – ஏழாண்டுப் போர்: ஜார்ஜ் வாஷிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தன.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜார்ஜ் வாஷிங்டன் மசாசுசெட்சில் இராணுவத்துக்குத் தலைமை வகித்தார்.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் பிரித்தானிய ராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 360 பேரைக் கொன்றனர்.
1778 – புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது.
1844 – ஐஸ்லாந்தில் கடைசி இணையான பெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன.
1848 – அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கால்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.
1867 – தமிழ்நாட்டில் விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1866 – புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய-புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.
1890 – ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43-ஆவது மாநிலமாக இணைந்தது.
1918 – தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் எஸ்.வி. ரங்காராவ் பிறந்த நாள்.
1928 – கர்நாடக இசைப் பாடகர் எம். எல். வசந்தகுமாரி பிறந்த நாள்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் படையினரால் நாசி ஜேர்மனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1962 – பிரான்சுக்கு எதிரான அல்ஜீரிய விடுதலைப் போர் நிறைவு பெற்றது.
1969 – சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
1970 – பிரித்தானிய விமானம் ஸ்பெயினில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் பலியாகினர்.
1980 – இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிறந்த நாள்.
1988 – அமெரிக்க போர்க் கப்பல் பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 290 பேரும் கொல்லப்பட்டனர்.
2006 – பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 XP14 என்ற சிறுகோள் பறந்தது கண்டறியப்பட்டது.
சிறப்பு நாள்
பெலரஸ் – விடுதலை நாள் (1944)
You must log in to post a comment.