முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள்

திமுக தலைவராக இருந்தவரும், 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்து மறைந்த மு. கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழக அரசியலில் 3 தலைமுறைகளைக் கண்டவர். திமுகவின் தலைவராக 50 ஆண்டுகளாக இருந்தவர். தான் போட்டியிட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் அனைத்திலும் வெற்றி கண்டவர். எழுத்தாற்றல், பேச்சாற்றல், ஆளுமை திறன் ஆகியவற்றை ஒருங்கே அமைந்தவர். அரசியல் மேடைகளையும், இலக்கிய மேடைகளையும் தனித்தனியாக பார்த்தவர். அரசியல் மேடைகளில் அவரது பேச்சை கேட்க, கட்சி பாகுபாடின்றி பலரும் திரள்வது வழக்கம். அவர் மீதான கடுமையான விமர்சனங்களைக் கூட எவ்வித சலனமும் இன்றி எதிர்கொண்டவர். உடன்பிறப்பே என அவர் தலைப்பிட்டு எழுதிய 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மடல்கள் கட்சி விசுவாசிகளை என்றைக்கும் ஆக்கிரமிக்க செய்திருக்கும் எழுத்து வல்லமை கொண்டவர். வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7-ஆம் தேதி தனது 94-ஆவது வயதில் காலமானார்.

பிற நிகழ்வுகள்

கிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்தார். அதைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் “கிரான்னன்” என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1461 – மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக ராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் தற்கொலையுண்டார்.

1819 – கொலம்பியாவின் “பொயாக்கா” என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றார்.
1832 – இலங்கையில் சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டது.

1906 – கொல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
1927 – ஒன்டாரியோவுக்கும் நியூயார்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.
1933 – ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 ஆசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

1941 – கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மறைந்தார்.
1944 – திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் I) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.
1955 – சோனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்கத் தொடங்கியது.
1960 – கோட் டி ஐவரி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.
1998 – தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்க தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.