கொய்யா விலை சரிந்தது
மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் தாலூகாக்களில் கொய்யா விளைச்சல் அதிகரித்துள்ளதால், அதன் விலை மிகுந்த சரிவை சந்தித்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் பேரையூர் வட்டத்தில் பல கிராமங்களிலும், அலங்காநல்லூர் வட்டத்தில் வெள்ளையம்பட்டி, பொந்துகம்பட்டி, சரந்தாங்கி ஆகிய பகுதிகளிலும் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. இருந்தபோதிலும், பேரையூர் பகுதிகளில் கொய்யாப்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகளிடமிருந்து, வியாபாரிகள் கொய்யாவை கிலோ ஒன்றுக்கு ரூ.18-க்கு கொள்முதல் செய்கின்றனராம்.
கடந்த மாதம் வரை கிலோ ரூ.30-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்த நிலையில் இந்த விலை சரிவு கொய்யா வியாபாரிகளை கவலை அடையச் செய்துள்ளது.
You must log in to post a comment.