சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இந்திய தேசியக்கொடி ஒளிர்ந்தது ஏன் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மிக உயரமான மலையான மேட்டர்ஹர்னில் அண்மையில் இந்திய தேசியக்கொடி ஒளிர விடப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை அளித்தமைக்காக இந்திய மூவர்ண தேசியக் கொடியை ஒளிரவிட்டதாக பாஜகவின் தேசிய பொதுச் செயலர் சந்தோஷ் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சமூக ஊடகங்களில் வேகமாக பல்லாயிரக்கணக்கானோருக்கு பரவியது.
தற்போது அதற்கும், இந்திய தேசியக்கொடி ஒளிர விடப்பட்டதற்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளதாம்.
சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா ஆணையம் மார்ச் மாதப் பிற்பகுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் மேட்டர்ஹார்னில் (மலைப் பகுதியில்)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் தேசிய கொடியை ஒளிரச் செய்து வருகிறது. கொரோனா பாதிப்பால் கடினமான சூழலில் உள்ள உலகுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கான அடையாளமாக பல்வேறு நாடுகளின தேசியக்கொடிகள் ஒளிரவிடப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
மேட்டர்ஹர்ன் மலையில் ஒளிரவிடப்பட்ட இந்திய தேசியக்கொடி உள்ளிட்ட சில நாடுகளின் கொடிகளின் படங்கள்…

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.