கிரண் பேடி பிறந்த நாள்

1949 – இந்தியாவின் முதல் பெண் இந்திய காவல் சேவை அதிகாரியான கிரண் பேடி பிறந்த நாள்.

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இருந்து வரும் கிரண் பேடி பன்முகங்களைக் கொண்டவர். இவர் இந்தியக் காவல் பணியில் 1972-இல் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமைக்குரியவர். 1993-இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறையில் இவரின் சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றது. 1994-ஆம் ஆண்டுக்கான ரமோன் மக்சேசே விருது பெற இது ஏதுவாக அமைந்தது.

2007-இல் இவர் பணியி்ல் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 2011-இல் நடந்த லஞ்ச ஒழிப்பு போராட்டத்தில் முக்கிய பங்களிப்பு வகித்தார். பின்னர் இவர் பாஜகவில் 2015-இல் தன்னை இணைத்துக் கொண்டார். 2016 மே 29 முதல் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார்.

பிற நிகழ்வுகள்

68 – ரோமப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டார்.

1781 – ஜார்ஜ் ஸ்டீபென்சன் – நீராவி ரயில் என்ஜின் கண்டுபிடித்த எந்திரப் பொறியாளர் பிறந்த நாள்.
1873 – லண்டன் அலெக்சாந்திரா அரண்மனை தீயினால் அழிந்தது.
1923 – பல்கேரியாவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1928 – ஆஸ்திரேலியாவுக்கும் –  ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார்.
1934 – வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது.
1935 – வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் கிழக்கு கரேலியாவினுள் ஊடுருவியது.

946 – பூமிபோன் ஆடுல்யாடெ தாய்லாந்தின் அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகின் மிக நீண்டகால அரசர் ஆவார்.
1962 – தங்கனீக்கா குடியரசானது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.