கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடக்கம்
புதுதில்லி: கேரளாவில் வழக்கம்போல் ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்குவது வழக்கமானது. இந்த பருவமழை காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதகாலமாகும்.
நடப்பு ஆண்டில், தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும், பருவமழையால் 70 சதவீதம் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பருவமழையால், நாட்டில் மழையின் அளவு 102 சதவீதமாக இருக்கும். நீண்ட கால மழையளவு 4 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது. வடமேற்கு இந்தியாவில் 107 சதவீதமும், வடகிழக்கு இந்தியாவில் 96 சதவீதமும் மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மே 10-ஆம் தேதிக்கு பிறகு, கேரளாவின் மினிக்காய், அமினி திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், காசர்கோடு மங்களூரு உள்ளிட்ட 14 மழை கண்காணிப்பு மையங்களில், 3 நாள்களுக்கும் மேலாக 2.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும் அங்கு மழை பெய்கிறது.
You must log in to post a comment.