காய்கறி – தேங்காய்ப்பால் ஸ்டூ

தேவையானவை: ஒரு கப் தேங்காய் துருவல்,  அரை கப் கேரட் துண்டுகள், அரை கப் உருளைக் கிழங்கு துண்டுகள், கால் கப் பீன்ஸ் துண்டுகள், ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 3 ஏலக்காய், 2 கிராம்பு, கறிவேப்பிலை இலைகள், இலவங்கப்பட்டை, உப்பு.

செய்முறை: தேங்காயை அரைத்து வடிகட்டி தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளவும். பாதி அளவு தேங்காய் பாலில் நறுக்கிய காய்கறிகள், கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, இலவங்கத்தை சேர்த்து வேக விடவும். காய்கறிகள் ஓரளவு வெந்ததும், மீதியுள்ள தேங்காய்ப் பாலை ஊற்றி வேக வைக்கவும். நன்றாக காய்கறிகள் வெந்ததும் (சுமார் 5 நிமிடத்துக்குப் பிறகு) மிளகு, ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணையை கலந்து சற்று கலக்கி இறக்கிவிடவும். இப்போது காய்கறி ஸ்டூ தயார்.

சிலர் ஸ்டூ காரமாக இருக்க வேண்டும் என விரும்பினால் ஒரு துண்டு பச்சைமிளகாயை கீறி கடைசியாக போடலாம். ஆனால் பெரும்பாலும் ஸ்டூவில் பச்சை மிளகாய் சேர்ப்பதில்லை.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.