கவிஞர் வைரமுத்து பிறந்த நாள்

கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை 7 முறை பெற்றுள்ளார். 1980-இல் நிழல்கள் திரைப்படத்தில் – பொன்மாலைப் பொழுது – என்னும் பாடலை முதன்முதலில் எழுதினார். இவர் இளையராஜவுடனும், ஏ.ஆர். ரகுமானுடனும் இணைந்து வழங்கிய பாடல்கள் பல விருதுகளைப் பெற்றுள்ளன. மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியுடன் மிக நெருக்கமாக பழகியவர், அவரது அன்புக்கு பாத்திரமானவர்களில் இவரும் ஒருவராக திகழ்ந்தார்.

.

பிற நிகழ்வுகள்

கி.மு.587 – சாலமோனின் கோயில் இடிக்கப்பட்டதை அடுத்து பாபிலோனின் எருசலேம் முற்றுகை முடிவுக்கு வந்தது.

1174 – கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் ஸ்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிராலாந்தின் 2-ஆம் ஹன்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார்.

1249 – ஸ்காட்லாந்தின் மன்னராக 3-ஆம் அலெக்சாந்தர் முடிசூடினார்.

1643 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் ஹன்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.

1830 – வங்காள மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இசுக்கொட்டிசு சர்ச் கல்லூரி கொல்கத்தாவில் அலெக்சாண்டர் டப் ராசாராம் மோகன் ராய் ஆகியோரால் நிறுவப்பட்டது.

1844 – இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

1863 – நியூயார்க் நகரில் அரசுக்கு எதிரான 3 நாள் கலவரங்கள் தொடங்கின. இதில் 120 பேர் கொல்லப்பட்டனர்.

1869 – இந்துப் பிள்ளைகளின் கல்விக்காக ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.

1878 – பெர்லின் உடன்பாட்டை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பால்கன் குடாவின் வரைபடத்தை மாற்றியமைத்தன. செர்பியா, மொண்டேனேகுரோ, ருமேனியா ஆகியன முழுமையாக உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலை அடைந்தன.

1923 – லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்டது.

1930 – முதலாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் தொடங்கின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தொடங்கினர்.

1953 – தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பிறந்த நாள்

1971 – மொரோக்கோவில் தோல்வியடைந்த ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 10 ராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.

1977 – சோமாலியா எத்தியோப்பியா மீது போரை தொடங்கியது.

2011 – தெற்கு சூடான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.

2016 – ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் தனது பதவியைத் துறந்தார் தெரசா மே புதிய பிரதமரானார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.