பார்வையற்றோருக்கு ரெட்கிராஸ் சார்பில் உதவிப் பொருள்கள்

வேலூர்: ஜெனிவா உடன்படிக்கை தினத்தினை முன்னிட்டு உடல் ஊனமுற்றோர்,  பார்வையற்றோருக்கு காட்பாடி ரெட் கிராஸ் சார்பில் அரிசி மளிகை பொருட்க வழங்கப்பட்டன.

ரெட்கிராஸ் சங்க மாநாட்டில் 1949 ஆகஸ்ட் 12 -இல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது நான்காவது ஜெனீவா உடன்படிக்கை. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்டது இந்த உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையை நினைவு கூறும் வகையில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் குடும்பத்தினருக்கு கரோனா நிவாரண பொருள்கள் அரிசி, மளிகை பொருட்கள்  உள்ளிட்டவை 25 குடும்பத்தினருக்கு இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி துணைக்கிளை சார்பில் காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பெ.ஶ்ரீதரன், பி.எஸ்.என்.எல். உறுப்பினர் மற்றம் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோர் வழங்கினர்.

செயலாளர் செ.நா.ஜனார்த்தனன்,  துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சுபாஷ், பகுதி செயலாளர்கள் ஜனார்த்தனன், பேரவை ரவி, பி.டி.கே.மாறன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கு.ருத்ராரெட்டி, தணிகை கோ.செல்வம், திருமகள் செல்வமணி, ரெட்கிராஸ் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சிவவடிவு, ஜி.செல்வம், வாழ்நாள் உறுப்பினர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், வி.காந்திலால்படேல், எ.ஆனந்தகுமார், சின்னசாமி, ஆர்.லோகநாதன், தலைமையாசிரியர் ஶ்ரீராமுலுரெட்டி, தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், பி.ஜெயகுமார், எம்.அண்ணாதுரை, கே.ஆர்.பாபு, கே.ஆர்.ரவி, காட்பாடி அன்பு நெஞ்சங்கள் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பழைய காட்பாடி, தாராபடவேடு பகுதியில் உள்ள உடல் ஊனமுற்றோர், பார்வைகுறைபாடு உள்ளோர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காட்பாடி ரெட்கிராஸ் சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது:
ஜெனீவா உடன்படிக்கை’ என அழைக்கப்படுவது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும். இரண்டாம் உலக போருக்கு (1939-45) பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அதன் முந்தைய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்தும் சில கொள்கைகளையும் சேர்த்து 1949-ஆம் ஆண்டு ஒப்பந்தமாக இறுதி செய்யப்பட்டது.
ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால உரிமைகளை வரையறுகின்றது. இந்த ஒப்பந்தங்களை 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளன என்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.