வாடகை கார் ஓட்டுநர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள்
வேலூர்: இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் காட்பாடியில் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு கரோனா நிவாரண பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜுலை31 வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் வாழ்வாதரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள காட்பாடி ரயில் நிலைய வாடகை கார் ஓட்டுநர் குடும்பத்தினருக்கு காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சார்பில் அரிசி, மசாலா தூள், சமையல் எண்ணெய், கடுகு, சீரகம், உப்பு உள்ளிட்ட பொருள்கள் 25 குடும்பத்தினருக்கு வட்டாட்சியர் ஆர்.பாலமுருகன் வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காட்பாடி ரயில் நிலைய மேலாளர் கே.ரவீந்தரநாத் கலந்து கொண்டார். செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
தலைமையாசிரியர் கு.ருத்ராரெட்டி, காட்பாடி வட்ட மண்டல துணை வட்டாட்சியர் முரளிதரன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், ரயில்வே காவல் படை துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன், ரெட்கிராஸ் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சிவவடிவு, ஜி.செல்வம், வாழ்நாள் உறுப்பினர்கள் ஏ.ஆனந்தகுமார், வி.காந்திலால்படேல், ஜெ.கஜேந்திரன், ஆறுமுகம், தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், எஸ்.மோதகப்பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
25 பேருக்கான அரிசி, மசாலா தூள்1, சமையல் எண்ணெய், உப்பு, கடுகு, மஞ்சள் தூள் உள்ளிட்ட பொருள்கள் என ஒருவருக்கு ரூ.500 வீதம் ரூ.12,500 மதிப்பீட்டில் நிவாரண பொருள்களை தலைமையாசிரியர் கு.ருத்ராரெட்டி, தணிகை ஜி.செல்வம் ஆகியோர் ரெட்கிராஸ் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.
வாடகை கார் ஒட்டுநர் சங்க தலைவர் தண்டபாணி நன்றி கூறினார்.
You must log in to post a comment.