காட்பாடி பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர்

காட்பாடி: இந்தியன் ரெட் சங்கம் சார்பில் வேலூர் காட்பாடியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் ஆகியவற்றை வேலூர் மாநகராட்சி ஆணையர் என்.சங்கரன் புதன்கிழமை வழங்கினார்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜுலை 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் காட்பாடி பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தற்காலிக உழவர் சந்தையில் உள்ள விவசாயிகளுக்கு காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள், கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வேலூர் மாநகராட்சியின் ஆணையாளர் என்.சங்கரன் வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்வுக்கு காட்பாடி ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். வேலூர் மாநகராட்சியின் உதவி ஆணையர் ஜி.செந்தில்குமார்,  மாநகர சுகாதார அலுவலர் பி.பாலமுருகன், மேற்பார்வையாளர் டேவிட், காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, பொருளாளர் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சிவவடிவு, ஆர்.ராதாகிருஷ்ணன், ஆயுள் உறுப்பினர்கள் வி.காந்திலால்பட்டேல், பேராசிரியர் கே.அந்தோனிபாஸ்கரன், ஓ.சின்னசாமி, ஜெ.கஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மாநில ரெட்கிராஸ் கிளையின் தலைவர் ஹரிஷ் எல் மேத்தா, மாநில பொருளாளர் மற்றும் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் சி.இந்தர்நாத் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாநில அமைப்பினால் வழங்கப்பட்ட முகக் கவசங்கள் இம்முகாமில் வழங்கப்பட்டன.
காட்பாடி உழவர் சந்தையின் வேளாண் அலுவலர் மீனாபிரியா, உதவி வேளாண் அலுவலர்கள் சித்ரா, ஜெகதீஸ்வரன், வினோத் ஜுனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் ஜி.சீனிவாசன், தன்னார்வ தொண்டர்கள் கே.சி.வி.கதிரேசன், செ.ஜ.சோமசுந்தரம், ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

காட்பாடி காந்திநகர், ராதாகிருஷ்ணன் நகர், காங்கேயநல்லூர் சாலை ஆகிய பகுதிகளில் 600 பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் 200 பேருக்கு முக கவசங்களும் வழங்கப்பட்டன.

விழிப்புணர் பிரச்சாரம்
ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள காலங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளி வரக்கூடாது என்றும்,  கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்தியினை பிரசாரம் செய்ய அனுமதி கோரி மாநாகராட்சி ஆணையர் என்.சங்கரன் அவர்களிடம் காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அவர் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த அனுமதி அளித்தார்.

கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்:
கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆரோக்கியம் தமிழக அரசு சிறப்பு திட்ட கபசுர நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் விதம் குறித்த துண்டு பிரசுரத்தையும், தமிழக அரசினால் வெளியிடப்பட்ட கொரோனா வைரஸ் கோவிட்-19 அறிந்து கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் பொதுமக்கள், வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் என்.சங்கரன் வழங்கினார்.

காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் காந்திநகர், ராதாகிருஷ்ணன் நகர், காங்கேயநல்லூர் சாலை ஆகிய பகுதிகளில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களும் வழங்கிய வேலூர் மாநகராட்சி ஆணையர் என்.சங்கரன். உடன் காட்பாடி ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், உதவி ஆணையர் ஜி.செந்தில்குமர் மாநகராட்சி சுகாதார அலுவலர் பி.பாலமுருகன், மேற்பார்வையாளர் டேவிட், துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சிவவடிவு, ஆர்.ராதாகிருஷ்ணன் வாழ்நாள் உறுப்பினர் காந்திலால்படேல், சீனிவாசன், கதிரேசன் ஆகியோர்.
Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.